Thursday, January 16, 2014

பாபரி பள்ளிவாசல் இடம்: கோயில் கட்டுவதற்கு ஆகமங்களின் அடிப்படையில் தகுதியற்றது

நீதிபதி தர்ம வீர சர்மா
 
 
நீதிபதி தர்ம வீர சர்மா

பாபரி பள்ளிவாசல் இஸ்லாமிய நெறிமுறைகளை மீறிக் கட்டப்பட்டது என்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு சொன்னவர்களில் ஒருவரான தர்ம வீர் சர்மா கூறியுள்ளார். எந்த இஸ்லாமிய நெறிமுறை மீறப்பட்டது என்று அவர் குறிப்பிடவில்லை. ஆனால் பாபரி பள்ளிவாசல் அமைந்திருந்த இடம் கோயில் கட்டுவதற்கு தகுதியற்ற இடம் என்பதே சில ஹிந்து சமய அறிஞர்களின் கருத்தாக இருந்துள்ளது.



சில்ப-சாஸ்திர என்னும்   ஹிந்து கட்டடக் கலை ஆய்வுகளின் படி பாபரி மஸ்ஜித் இருந்த இடம் கோயில் கட்ட தகுதியற்றதாகும். மானஸாரா எனும் சில்ப-சாஸ்திர நூலின் 3வது அத்தியாயத்தை மேற்கோள் காட்டி, பெங்களூரைச் சேர்ந்த மாஜிஸ்ட்ரேட் ராம் ராஜ் தனது நூலான (P 16-17) - (ஹிந்துக் கட்டடக் கலை குறித்த கட்டுரை தொகுப்பில்) எந்த இடங்களையெல்லாம் கோயில் கட்ட பயன்படுத்தக்கூடாது என்று கூறுகின்றார்.

‘வட்ட வடிவில் அல்லது அரைவட்ட வடிவில் அமைந்தது, மூன்று அல்லது ஆறு கோணம் உடையது, திரிசூலம் அல்லது முறம் போன்றுள்ளது, மீனுடைய பிற்பகுதியைப் போன்றது அல்லது ஆமையைப் போன்றது அல்லது பசுவின் முகம் போன்றது - மனித மண்டை ஓடுகள், - எலும்புகள், - எண்ணை, தேன், பிணங்கள், மீன்கள் நிறைந்து காணப்படும் இடங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. என்று அந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

பாபரி பள்ளிவாசல் இருந்த இடம் கோயில் கட்டுவதற்குத் தகுதியான இடம் இல்லை என்று கமலாபதி திரிபாதி போன்ற பண்டிதர்கள் கூறியுள்ளனர் (பார்க்க: டெக்கான் ஹெரால்ட், ஜுலை 8, 1989)

சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள குறைபாடுகளில் பெரும்பாலானவை பாபரி மஸ்ஜித் நிலை கொண்டிருந்த இடத்திற்குப் பொருந்தி வருகின்றன. இருப்பினும் அந்த சர்ச்சைக்குரிய, அபச்சாரமிக்க இடத்தில் ராமருக்கு கோயில் கட்ட விசுவ ஹிந்துபரிசத் மேற்கொண்டுள்ள முயற்சிகள் ஹிந்து சாஸ்திரங்களை பழிப்பதாக உள்ளன. மண்டை ஓடுகள், எலும்புகள் மற்றும் பிணங்கள் காணப்படும் இடங்களில் கோயில்கள் என்ன, வீடுகளே கட்டக் கூடாது என்பது ஹிந்துக்களின் ஐதீகம். ஆனால் பாபரி மஸ்ஜிதின் கிழக்கு வாசலுக்கு முன்பு அதன் வளாகத்தில் 75 முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கஞ்சே சஹித்டன் என்று அழைக்கப்படுகின்றது என்று ராம் கோபால் பாண்டே தனது நூலில் (ராக்த் ரஞ்சித் இத்திஹாஸில்) குறிப்பிடுகிறார்.

பாபரி மஸ்ஜித் வளாகத்தில் 2003ல் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி ‘முடிவுகளை தனது தீர்ப்பிற்கு ஆதரவாக நீதிபதி சர்மா குறிப்பிட்டுள்ளார். இந்த அகழ்வாராய்ச்சியின் முடிவு சர்ச்சைக்குரியது. ஆனால் இதில் கூட முஸ்லிம்கள் பயன்படுத்தும் பீங்கான்கள் கிடைத்தது. இது தவிர எலும்புகளும் கிடைத்தன. இதன் மூலம் அது முஸ்லிம்களின் கபரஸ்தான் என தெரிகிறது.

வி.ஹெச்.பி. எழுதித் கொடுத்ததைத் தான் சர்மா தீர்ப்பாக தந்துள்ளார். எனவே தான் அவருக்கு சாதுக்கள் பாராட்டு விழா நடத்தவுள்ளதாக ராம் விலாஸ் வேதாந்தி என்ற சாமியார் அறிவித்துள்ளார் என்று தோன்றுகிறது.

-இ.அருட்செல்வன்

0 comments:

Post a Comment