மோடியைப் பற்றி இந்திரன் சந்திரன் என்று ஒரு பக்கம் திட்டமிட்ட வகையில் புகழ் புராணப் பட்டம் பறக்க விடப்பட்டாலும், அவரைப்பற்றி ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்கள் மூலம் அவரது அந்தரங்கம் அசிங்கமானது என்பது அம்பலமாகி வருகிறது. குறிப்பாக பிரதீப் சர்மா என்னும் அய்.ஏ.எஸ். அதிகாரி சி.எஸ்.என். அய்.பி.என். ஆங்கில அலை வரிசையில் அளித்த பேட்டி ஒன்று போதும்
- மோடி என்னும் விகார மனிதனின் முழு வடிவத்தைத் தெரிந்து கொள்வதற்கு. இதில் ஒரு பெரிய வெட்கக்கேடு என்ன வென்றால், மோடியைப்பற்றி வெளிவரும் அசிங்கமான தகவல்களை இந்நாட்டுப் பார்ப்பன ஊடகங்களும், முதலாளித்துவ சக்திகளின் கைகளில் பதுங்கியுள்ள ஏடுகளும், இதழ்களும் அப்படியே மூடி போட்டு மறைக் கின்றன. தெகல்கா ஆசிரியர் தேஜ்வால் பற்றிய தகவல்களைப் பெரிதாக்கி, மோடியின் பெண் தொடர்பான சங்கதிகளைக் கழுத்தைத் திருகிப் புதைத்து விட்டனர்.
மான்சி என்னும் கட்டடக் கலை பொறியாள ரான பெண்ணுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து சி.பி.அய். வசம் விசார ணையை ஒப்படைக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மான்சி என்ற அந்தப் பெண்ணுக்கும் மோடிக்கும் இடையில் நடைபெற்ற தொலைப் பேசி உரையாடல்களையும் பிரதீப் சர்மா அந்தப் பேட்டியில் கூறினார்.
ஒரு பெண்ணிடம் பேசத் தகாத இரட்டை அர்த்தம் தொனிக்கும் சொற்களை உதிர்த்திருக்கிறார். நள்ளிரவில்கூட மோடியை, அந்தப் பெண் சந்தித்திருக்கிறார் என்கிற தகவல்கள் எல்லாம் வெளி வந்துள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி, விதிமுறை களை எல்லாம் தாண்டி, கட்டடக் கலை தொடர்பாக பெரிய பெரிய ஒப்பந்தங்கள் மோடி அரசால் அந்தப் பெண்ணுக்கு, அளிக்கப் பெற்று கோடிகளை வருவாயாகப் பெற்றிருக்கிறார். விலை உயர்ந்த வெளிநாட்டுக் காரில் அந்தப் பெண் பயணிக்க ஆரம்பித்துள்ளார். அந்தக் காரை பழைய விலைக்கு விற்றால்கூட அதை வாங்கும் தகுதி பலருக்கு இல்லை; காரணம் பழைய விலைகூட கோடிகளைத் தொடும் என்று அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி பேட்டியில் போட்டு உடைத்து விட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு வரிகூட இதனை மோடியால் மறுக்க முடியவில்லை என்பதுதான்
. பதில் சொல்ல ஆரம்பித்தால் வசமாகச் சிக்கிக் கொண்டு விடுவோம் என்ற அச்சம்தான். பிரதீப் சர்மாவை அந்தப் பெண் சந்தித்து வந்ததால், அந்தப் பெண்ணை உளவு பார்க்க ஏற்பாடு செய்துள்ளார், முதல் அமைச்சர் நரேந்திரமோடி. அந்த அளவுக்கு அந்தப் பெண் ணின்மீது உரிமை கொண்டாடியிருக்கிறார் உள்ளத்தில் என்பதுதான், இதற்குள் குடி கொண்டிருக்கும் உண்மையாகும். ஒரு கட்டத்தில் பிரதீப் சர்மா அய்.ஏ.எஸ். கைது செய்யப்பட்டு சிறைக்குள்ளும் தள்ளப்பட் டுள்ளார். 27 ஆண்டு காலம் சிறந்த அய்.ஏ.எஸ். அதிகாரியாக பெயர் பெற்றவர்; இன்னும் சொல்லப் போனால் முதலமைச்சர் மோடியாலும் புகழப்பட்டவர்கூட! அந்தப் பெண் விஷயத்தில் இவர் போட்டிக்கு வந்து விடுவார் என்ற நினைப்பில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார். தன் சொந்த நலனுக்காக எதையும் செய்யக் கூடியவர் இந்தமோடி; அவர் பேச்சை நம்பி அத்துமீறி நடந்து கொண்ட அதிகாரிகள் யெல்லாம் நட்டாற்றில் விடப்படவில்லையா? இத்தகு குணாளர் தான் பாரதப் புண்ணிய பூமியின் பிரதமர் நாற்காலியை அலங்கரிக்க ஆசைப்படுகிறார். நாட்டு மக்கள் அசிங்கப்படப் போகிறார்களா என்று தெரியவில்லை
. எமதுநன்றிகள். "விடுதலை" நாளிதழ்க்கு.

0 comments:
Post a Comment