Tuesday, January 07, 2014

மியான்மாில் 2013 இறுதிக்குள் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை!


இந்தப் பொது மன்னிப்பில் உள்ளடங்குவோர் எத்தனை பேர் என்பது தெளிவாக தெரியவில்லை அத்துடன்  அதிகாரிகளிடம் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் எவ்வித கால அட்டவணையும் இல்லை.

2013 இறுதிக்குள் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கவிப்பது என்ற நாட்டின் ஜனாதிபதி உறுதிமொழியின் ஒரு பகுதியாக மியான்மர் ஐந்து கைதிகள் விடுதலை செய்துள்ளது, மேலும் பலர் அடுத்த வாரம் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது

தண்டனை வழங்கப்பட்ட அல்லது சட்டவிரோதமாக ஒன்று கூடியமை,  தேச துரோகம், அரசாங்கத்தை அவமதித்தமை மற்றும் அமைதியான சட்டத்தினை மீறியமை போன்ற பல்வேறுபட்ட அரசியல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஜனாதிபதி தெயின் செயினினால் திங்கட்கிழமையன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையன்று அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அனைத்து அரசியல் கைதிகளையும் இவ்வாண்டின் இறுதிக்குள் விடுதலை செய்வதென்று ஜூலை மாதம்  ஜனாதிபதி தெயின் செயினினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கமைவாக இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சோதனைகள் மற்றும் வழக்கு விசாரணைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் பெயர்கள் அரசியல் கைதிகளின தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த குழுவினால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளன என அந்தக் குழுவின் உறுப்பினரான போ கீ தெரிவித்தார். மற்றுமொரு தொகுதியினர்  ஜனவரி முதல் வாரத்தில் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


'நாங்கள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பினை வரவேற்கிறோம். எனினும், அரசியல் கைதிகளின் எண்ணிக்கையினை பூச்சிய நிலைக்கு மாற்றுவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.   சட்டத்தின் ஆட்சியும் மேலும் அதிகமான அரசியல் சுதந்திரமும் தேவையாக இருப்பதாகவும்' போ கீ கூறினார்.

விடுவிக்கப்பட்ட ஐவரும் மாவட்ட சிறைகள் மற்றும் மியான்மார் நாட்டின் மோசமான இன்சீன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

'கம்பிகளுக்கு பின்னால் எம்மை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சட்டங்கள் பலவீனமானவை. அதனால்தான் நாம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளோம். எவ்வாறெனினும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதென்ற தமது வாக்குறுதியை காப்பாற்றிமைக்காக ஜனாதிபதியை மதிக்கின்றேன்' என இன்சீன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளுள் ஒருவரான யான் நெய்ங் துன் கூறினார்


இந்த ஆண்டின் ஆரம்பத்தில்  வட மியான்மாரில் அமைந்துள்ள காசின் இன சுதந்திர அமைப்பின் தலைமையகத்தை நோக்கிச் சென்ற பேரணிக்கு தலைமைதாங்கிச் சென்ற யான் நெய்ங் துன் மற்றும் ஆங் மின் நெய்ங் ஆகியோர் அனுமதி பெறாமல் பேரணியை நடத்திச் சென்றமைக்காக அமைதியான சட்டத்தினை மீறிய குற்றத்திற்காக ஏழு மாத சிறைத் தண்டனையினை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.


அரசியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்ளும் மேலும் 200 பேரின் மீதான குற்றச்சாட்டுக்கள் உடனடியாக கைவிடப்படும் என கைதிகள் தொடர்பில் ஆராய்ந்த குழுவின் உறுப்பினரும் முன்னாள் அரசியல் கைதியுமான யீ எங்  தெரிவித்தார்.

குழுவினால் அரசியல் கைதிகளென பட்டியலிடப்பட்ட அனைத்து கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என கூற முடியாது எனெனில் சில கைதிகள் கொலை போன்ற ஏனைய குற்றங்களை புரிந்தவர்களாகக் காணப்படுகின்றனர். எனவும் அவர் தெரிவித்தார்.

தெயின் செயின் ஜனாதிபதியானது தொடக்கம், சுமார் 1,300 அரசியல் கைதிகள் விடுதலை செய்துள்ளதாக யீ எங்  கூறினார்.

இராணுவ அடக்குமுறை ஆட்சியின் ஐந்து தசாப்தங்களுக்கு பின்னர் 2011 இல் முன்னாள் இராணுவ ஜெனரலான தெயின் செயின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் , நாட்டின் பலவீனமடைந்திருந்த பொருளாதாரத்தை உயர்த்த நிதி மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத ஆட்சியின் காரணமாக மியான்மார் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர் கொண்டது. பெரும்பாலான தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment