அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மதங்கள் தொடர்பான ஆய்வுத் துறையின் உறுப்பினரான ஆட்ரே டிரஷ்கே, ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’ நூலை எழுதியிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவிருக்கும் இந்நூல் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் ஆட்ரே டிரஷ்கே.
இந்திய வரலாற்றுப் பக்கங்களில் முகலாயர்களுக்கு இடமில்லை என்கிறது தற்போது ஆளும் பாஜக. ஆனால் முகலாயர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் சம்ஸ்கிருத மொழியை முன்னிறுத்தினார்கள் என்கிறது உங்களுடைய புத்தகமான ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி...